கர்நாடகாவில் அரசுப் பணிகளுக்காக, சிவில் சர்வீஸ் தேர்வு மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம்.
இந்நிலையில், அம்மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, ஞாயிற்றுக்கிழமை, கன்னட மொழித் தேர்வைக் கர்நாடக பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சார்பில் தேர்வு நடைபெற்றது.
இதில், மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே அமைந்துள்ள அரசு பெண்கள் பட்டமளிப்புக் கல்லூரியில் தேர்வு எழுதச் சென்றவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், தேர்வர்களிடம் காதணி, செயின், கால்விரல், மோதிரம் மற்றும் தாலிச் செயின் உள்ளிட்ட ஆபரணங்களை அகற்றுமாறு வற்புறுத்தியுள்ளனர்.
ஆனால், இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதித்துள்ளனர். இதனால், ஆவேசம் அடைந்த பாதிக்கப்பட்ட இந்து பெண்கள், அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.
ஏற்கனவே, கலபுர்கியில் உள்ள சரணபசவேஸ்வரா பல்கலைக்கழகத் தேர்வு மையத்தில் நடந்த போட்டித் தேர்வில் மோசடி செய்த 3 பேர் மற்றும் தேர்வு மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் மீது அசோக் நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முறைகேடுகளை தடுக்கவே இது போன்று செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சட்டம் என்றால், எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். முஸ்லீம் பெண்களுக்கு ஒரு சட்டம், இந்து பெண்களுக்கு ஒரு சட்டமா என அரசுக்கு எதிராகப் பெண்கள் கொந்தளித்து வருகின்றனர்.
விரைவில், காங்கிரஸ் அரசுக்கு எதிராக படித்த பெண்கள் எல்லோரும் ஒன்று திரண்டு மிகப் பெரிய பேராட்டம் நடத்தும் முடிவில் உள்ளனர்.