தமிழ் கடவுள் முருகனின் இரண்டாம் படை வீடு எனப் போற்றப்படும் திருச்செந்தூர் அருள்மிகு முருகன் திருக்கோவிலில், கந்த சஷ்டி திருவிழாவின் போது, நீதிமன்ற உத்தரவுப்படி உட்பிரகாரத்தில் பக்தர்கள் விரதம் இருக்க அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருத்தணி, திருவேற்காடு, திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களில் பசு மடமும், 11 இடங்களில் யானை நினைவு மண்டபமும் அமைக்கப்பட்ட உள்ளது.
குறிப்பாக, முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை என்று போற்றப்படும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருச்செந்தூரில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் யானை நினைவு மண்டபம், உப கோயிலான வெயிலுகந்தம்மன் கோவில் வளாகத்தில் பசு மடம் கட்டமுடிவு செய்யப்பட்டது. இதற்காக, திருச்செந்தூரில் ரூ.49.50 லட்சம் மதிப்பில் யானை நினைவு மண்டபம் கட்டப்படுகிறது.
மேலும், பக்தர்களுக்காகக் கோவில் வளாகத்தில் குடிநீர் வசதியுடன் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்ட உள்ளது. இதில் 30 ஆயிரம் பேர் தங்கி விரதம் இருக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.
இந்த நிலையில், திருச்செந்தூரில் யானை நினைவு மண்டபம் அறநிலையத்துறை அடிக்கல் நாட்டப்பட்டது. கந்த சஷ்டி விழாவின் போது, கோவில் உட்பிரகாரத்தில் விரதமிருக்க அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கந்த சஷ்டி திருவிழாவில் 20 லட்சம் மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி உட்பிரகாரத்தில் பக்தர்கள் விரதம் இருக்க அனுமதி கிடையாது எனத் திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.