காந்று மாசு ஏற்படுவதை தடுக்க விவசாய கழிவுகள் எரிப்பதை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காற்று மாசு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் காற்று மாசு பிரச்சினைக்கு பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள்தான் முக்கிய காரணம்” என நேரடியாக குற்றம்சாட்டியது.
டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது விவசாய கழிவுகள் எரிப்பதை நிறுத்த வேண்டும். நீங்கள் அதை எப்படி செய்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியாது, இது உங்கள் வேலை.
ஆனால் இது நிறுத்தப்பட வேண்டும். டிஜிபிக்கள் மற்றும் தலைமைச் செயலாளர் மேற்பார்வையின் கீழ் விவசாய கழிவுகள் எரிப்பது தொடர்பான நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை பஞ்சாப். உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி அரசுகள் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
டெல்லி அரசும் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். டெல்லியில் அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவைகளால் மாசு ஏற்படுவதோடு, பாதிக்கும்மேல் முழு அளவில் பயணிகள் இல்லாமல் ஓடுகின்றன.
இந்த பிரச்சினையில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஒற்றைப்படை, இரட்டைப்படை இலக்க எண் வாகன இயக்கம் நடைமுறை என்பது குறுகிய பார்வை போன்றது” எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.