சையது முஸ்தாக் அலி கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணி சாம்பியன்ஸ் பட்டதை வென்றது.
இந்தியாவில் ஐபிஎல் தொடருக்குப் பிறகு பெரிதும் பார்க்கப்படும் கிரிக்கெட்டாக இருப்பது சையது முஸ்தாக் அலி கிரிக்கெட் தொடர்.
இந்த தொடர் இந்தியாவில் நடைபெற்ற வந்த நிலையில் நேற்று இறுதிப்போட்டி நடைபெற்றது. மொஹாலியில் நடைபெற்ற இறுதி போட்டியில் பரோடாவும், பஞ்சாப் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற பரோடா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது.
அன்மோல்பிரீத் சிங், 61 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தார். 10 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். நேஹல் வதேரா, 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்தார்.
224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பரோடா அணி களமிறங்கியது. பரோடா அணியின் அபிமன்யு சிங் 61 ரன்கள், நினத் ரத்வா 47 ரன்கள், க்ருணல் பாண்டியா 45 ரன்கள், விஷ்ணு சோலங்கி 28 ரன்கள் எடுத்தனர்.
பரோடா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் மட்டுமே எடுத்தது . அதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது.
இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது 113 ரன்களை எடுத்த அன்மோல்பிரீத் சிங் பெற்றார். அபிஷேக் சர்மா தொடர் நாயகன் விருதை வென்றார். வெற்றி பெற்ற பஞ்சாப் அணிக்கு பரிசு தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.