இன்றைய நமது அன்றாட வாழ்வில் காலையில் எழுந்ததும் டீ, காபி குடிக்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. இன்னும் சிலருக்கு நினைத்த நேரம் டீ, காபி குடிக்கும் பழக்கம் உண்டு. இந்த டீ, காபியின் சுவைக்கு சர்க்கரையும், கருப்பட்டியும் மிகவும் இன்றியமையாதது.
சர்க்கரையைவிடக் கருப்பட்டி ஆரோக்கியம் மிக்கது என்பதாலும், சுவை மிகுந்தது என்பதாலும் பலரும் விரும்புகின்றனர். ஆனால், விலை அதிகம் என்பதால், பலரும் சர்க்கரையை நாடுகின்றனர்.
குறிப்பாக, தமிழகத்தில் இன்றும் வெளி மாவட்டங்களில் பனை மரத்திலிருந்தே பெரும்பாலும் கருப்பட்டி தயாரித்து வருகின்றனர். 6 மாதங்களுக்கு மட்டுமே கருப்பட்டி உற்பத்தியாகிறது. ஆனால், தாய்லாந்து போன்ற நாட்டில் தென்னை மரங்களிலிருந்து தெலுவு எடுத்து, அதிலிருந்து சர்க்கரை மற்றும் கருப்பட்டி தயாரித்து, அதை மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக, பொது மக்களுக்கு விற்பனை செய்கின்றனர்.
தாய்லாந்து நாட்டில் தென்னை மரத் தெழுவில் இருந்து கருப்பட்டி மற்றும் சர்க்கரை தயாரிக்கும் முறை🌳🍀 இதுபோல நாம் ஏன் யோசிப்பதில்லை, தென்னை விவசாயத்தை காக்க முயற்சி… pic.twitter.com/VFrr0x8wSS
— XWR(@)Sanatani (@experienceluv) November 8, 2023
இதன் மூலம் தரமான பொருட்கள் பொது மக்களுக்கு எளிதில் கிடைக்கும். மேலும், விவசாயிகளுக்கும் வருமானம் அதிகரிக்கும். எனவே, இன்றைய தொழில் நிறுவனங்கள் கம்யூட்டர் புரட்சியில் வெளுத்து வாங்கும் நிலையில், வேளாண்மைத்துறையில் மட்டும் நவீனம் புகுத்தப்படாமல் இருட்டிலே உள்ளது. இதற்குத் தமிழக வேளாண்மைத்துறை என்ன செய்யப்போகிறது எனக் கேள்வி எழுப்புகின்றனர் விவசாயிகள்.
இந்த நிலையில், தாய்லாந்தில் தென்னை மரத்தில் இருந்து தெலுவு எடுத்து சர்க்கரை மற்றும் கருப்பட்டி தயாரிக்கும் வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.