பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை நேரடியாக சந்தித்த முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி இன்று தனது 97வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அத்வானியின் இல்லத்திற்கு நேரில் சென்ற முன்னாள் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்க எனது வழிகாட்டியான முன்னாள் துணைப் பிரதமர் பத்ம விபூஷன் எல்.கே. அத்வானியை அவரது இல்லத்திற்கு சென்றேன். அவரது நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக நான் மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்கிறேன் என அவர் கூறியுள்ளார்.