எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள் தொடர்பாக சிறப்பு பெஞ்ச் அமைத்து தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யுமாறு அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எதிராக நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகளை விரைந்து முடிக்கக் கோரி அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த பொதுநல மனுவின் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் இன்று தீர்ப்பு வழங்கியது.
அப்போது எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்றும், வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்க வேண்டும். என நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்குகளை விசாரிக்கும் மாவட்ட நீதிபதிகள், நீதிபதிகளிடம் இருந்து வழக்குகள் தொடர்பாக அறிக்கை கேட்கலாம் என்றும் நீதிபதிகள் கூறினர்.
எம்பி எம்எல்ஏக்களுக்கு எதிரான குற்றவியல் விசாரணைகளைக் கண்காணிக்க உயர் நீதிமன்றங்கள் தலைமை நீதிபதி அல்லது தலைமை நீதிபதியால் நியமிக்கப்பட்ட பெஞ்ச் தலைமையில் சிறப்பு அமர்வு அமைக்கப்படும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களுக்கு போதுமான உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப வசதி ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.