ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.
உலகக்கோப்பையின் கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
நியூசிலாந்து அணியின் வீரர்கள் :
டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டாம் லாதம், லாக்கி பெர்குசன், டிம் சவுத்தி, டிரென்ட் போல்ட்
இலங்கை அணியின் வீரர்கள் :
பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (கேப்டன்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா, மஹீஸ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, சாமிக்க கருணாரத்னா, டில்ஷான் மதுஷங்க.