திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் 2316 ஏலதாரர்களுக்கு 2.85 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் 5180 மெட்ரிக் டன் அரிசியை மத்திய அரசு விற்பனை செய்கிறது.
அரிசி, கோதுமை, மைதா ஆகியவற்றின் சில்லறை விலையைக் கட்டுப்படுத்த, சந்தையில் தலையிட மத்திய அரசின் முன்முயற்சியின் ஒரு பகுதியாக, கோதுமை, அரிசி ஆகிய இரண்டின் வாராந்திர மின்னணு ஏலங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
8-ம் தேதி அன்று நடைபெற்ற 20-வது மின்-ஏலத்தில் 3 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் 2.25 லட்சம் மெட்ரிக் டன் அரிசி திறந்த சந்தை விற்பனை திட்டத்தின்கீழ், வழங்கப்பட்டது. 2.85 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் 5180 மெட்ரிக் டன் அரிசி 2316 ஏலதாரர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்தியா முழுவதிலும் சராசரியாக நியாயமான மற்றும் சராசரி தரம் கொண்ட கோதுமை குவிண்டாலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விற்பனை விலை ரூ.2150-ல் இருந்து ரூ.2327.04 என்ற விலையிலும், கோதுமையின் சராசரி விற்பனை விலை குவிண்டாலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை 2125 என்பதில் இருந்து குவிண்டாலுக்கு ரூ.2243.74 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
உள்நாட்டு திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் 2.5 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மத்திய பண்டக சாலை, என்.சி.சி.எஃப், நாஃபெட் போன்ற பகுதி அரசு நிறுவனம் மற்றும் கூட்டுறவு அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்தக் கோதுமை மைதாவாக மாற்றப்பட்டு, ‘பாரத் மைதா’ என்ற பிராண்டின் கீழ் கிலோவுக்கு ரூ.27.50-க்கு மிகாமல் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வழங்குகின்றன. 7-ம் தேதி வரை, 6051 மெட்ரிக் டன் கோதுமை, மைதாவாக மாற்றுவதற்காக இந்த 3 கூட்டுறவு சங்கங்களால் பெறப்பட்டுள்ளது.
உள்நாட்டு திறந்த சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் வணிகர்கள் கோதுமை விற்பனை வரம்பிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள். 7-ம் தேதி வரை நாடு முழுவதும் பரவலாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.