புதுதில்லியில் ‘வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கான டிபிஐஐடி-சிஐஐ தேசிய மாநாடு நடைபெற்றது. இதன் தொடக்க உரையில் ஆர்வமுள்ள இளம் இந்தியா, இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், கூறினார்.
தொழில் தொடங்குவதை எளிதாக்குவதற்கான தேசிய மாநாடு 023, நவம்பர் 8 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கான துறை, இந்தியத் தொழில் கூட்டமைப்புடன் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்தது.
இந்த மாநாட்டில் எளிதாகத் தொழில் தொடங்குவது தொடர்பான பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. வர்த்தகத்தை எளிதாக்கும் வழி, தேசிய ஒற்றைச் சாளர முறை, சர்ச்சை தீர்வு நடைமுறையை வலுப்படுத்துதல், வரி செலுத்துவதை எளிதாக்குதல் மற்றும் சுங்க நடைமுறைகள் குறித்த அமர்வுகள் மாநாட்டின் ஒரு பகுதியாகும். அமர்வுகளில் மாநிலங்கள், மத்திய அமைச்சகங்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்,
கடந்த 5 ஆண்டுகளில் பலவீனமான 5 பொருளாதாரங்களில் இருந்து முதல் 5 பொருளாதாரங்களுக்குள் ஒன்றாக இந்தியா முன்னேறியதற்கு அரசு மேற்கொண்ட அடிப்படைப் பொருளாதார சீர்திருத்தங்கள் தான் காரணம் என்று கூறினார். இளம் இந்தியா, இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று கூறினார்.
தொழில் தொடங்குவதை எளிதாக்குதல் என்ற தேசிய முன்முயற்சியை ஆதரித்ததற்காக தொழில்துறையை பாராட்டினார். மேலும் இந்த முயற்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல அரசு செயல்பட்டு வருவதாக கூறினார்.