உச்ச நீதிமன்றத்திற்கு மூன்று புதிய நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஜொலிஜியத்தின் பரிந்துரையின்பேரில், உச்ச நீதிமன்றத்திற்கு புதிய மூன்று நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அகஸ்டியன் ஜார்ஜ், குவஹாத்தி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்தீப் மேத்தா ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் மேக்வால் வெளியிட்டார்.
புதிய நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனைத்தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.