பாரிமுனையில் ஸ்ரீ வீரபத்ர சுவாமி தேவஸ்தான கோவில் கருவறைக்குள் உள்ள சுவாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரிமுனையில் உள்ள கோவிலில் மதுபோதையில் கோவிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசிய முரளி கிருஷ்ணன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பாரிமுனையில் ஸ்ரீ வீரபத்ர சுவாமி தேவஸ்தான கோவில் கருவறைக்குள் இன்று காலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. உடனே சம்பஇடத்திற்கு வந்த காவல்துறையினர், மது போதையில் இருந்த முரளி கிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர்.
மது போதையில் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக முரளி கிருஷ்ணன் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவரை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் முரளி கிருஷ்ணன் மீது குற்ற வழக்குகளும் நிறைய உள்ளன, சிறையில் இருந்து வெளியில் வந்ததும் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீ வீரபத்ர சுவாமி தேவஸ்தான கோவில் கருவறைக்குள் சுவாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக அர்ச்சகர் உமா சந்திரன் தெரித்துள்ளார்.
திமுக ஆட்சியில் அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் மக்களிடயே பெரும் அச்சத்தை உருவாக்கி உள்ளது.