பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரேசில் அதிபர் மேற்கு ஆசிய நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா ஆகியோர் மேற்கு ஆசியாவின் நிலைமை குறித்து தங்களது கவலைகளை பகிர்ந்து கொண்டனர்.
பிரேசில் அதிபரிடம் இருந்து பிரதமர் மோடிக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆசியாவில் நடந்து வரும் முன்னேற்றங்கள் குறித்த கவலைகளை இரு தலைவர்களும் பகிர்ந்து கொண்டனர்.
அவர்கள் பயங்கரவாதம், வன்முறை மற்றும் பொதுமக்களின் உயிர் இழப்பு குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினர் மற்றும் நிலைமையை விரைவாகத் தீர்க்க ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்தனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.