மணிப்பூரில் 9 பிரிவினைவாத இயக்கங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது :
பிரிவினைவாத செயல்களில் ஈடுபட்டு வரும் 9 மெய்தி அமைப்புளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், இது நவம்பர் 13ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்டுள்ள பிரிவினைவாத இயக்கங்களின் பட்டியல் :
> மக்கள் விடுதலை இராணுவம் (பிஎல்ஏ) மற்றும் அதன் அரசியல் பிரிவான புரட்சிகர மக்கள் முன்னணி (ஆர்பிஎஃப்)
> ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF) மற்றும் அதன் ஆயுதப் பிரிவான மணிப்பூர் மக்கள் இராணுவம் (MPA)
> மக்கள் புரட்சிகரக் கட்சி காங்க்லீபாக் (PREPAK) மற்றும் அதன் ஆயுதப் பிரிவான ‘செம்படை’,
> காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சி (கேசிபி) மற்றும் அதன் ஆயுதப் பிரிவு, ‘செம்படை’ என்றும் அழைக்கப்படுகிறது.
>கங்லீ யாயோல் கன்பா லுப் (KYKL)
> ஒருங்கிணைப்புக் குழு (CorCom)
> சோசலிச ஒற்றுமைக்கான கூட்டணி காங்லீபக் (ASUK)
இந்த அமைப்புகளுடன் தொடர்புடைய அனைத்து பிரிவுகளும், மற்றும் முன்னணி அமைப்புகளும் சட்டவிரோத அமைப்புகள் என்று அறிவிக்கப்பட்டன,
மெய்தி தீவிரவாத அமைப்புகளின் பிரிவினைவாத, நாசகார, பயங்கரவாத மற்றும் வன்முறைச் செயல்களை தடுக்கும் நோக்கில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
eaet
இந்த அமைப்புகள் மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர், காவல்துறை மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல்களில் ஈடுபடுவதாக அரசாங்கம் நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
மெய்தி தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு கேடு விளைவிப்பதாகவும் அவை சட்டவிரோதமான இயக்கங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்தும் மெய்தி மற்றும் பழங்குடி குக்கி சமூகங்களுக்கு இடையே இனக்கலவரம் வெடித்த மே 3 முதல் மணிப்பூரில் குறைந்தது 178 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.