தமிழக ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பான வழக்கை என்.ஐ.ஏ. விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் கடந்த கடந்த 25-ம் தேதி சென்னை நந்தனம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசினான். இது தொடர்பாக, தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், ராஜ்பவனில் பெட்ரோல் குண்டு வீசிய பிரபல ரவுடி கருக்கா வினோத்மீது சென்னை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், கருக்கா வினோத் மீது குண்டர் சட்டமும் பாய்ச்சப்பட்டது.
மேலும், இந்த விவகாரம் குறித்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு விரிவான அறிக்கை அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில், தமிழக ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் தீவிரவாதிகள் பின்னணி இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால், இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க முடிவு செய்துள்ளது. காரணம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் கருக்கா வினோத்துக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், கருக்கா வினோத் வழக்கு மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. மேலும், என்.ஐ.ஏ. விசாரணை மூலம் கருக்கா வினோத் பின்னணியில் உள்ளவர்கள் முகம் அம்பலத்திற்கு வரும் என நம்பப்படுகிறது.