இங்கிலாந்து சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், புதிதாக நியமிக்கப்பட்ட இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டேவிட் கேமரூனை சந்தித்து பேசினார்.
5 நாள் அரசு முறை பயணமாதக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இங்கிலாந்து சென்றுள்ளார். இந்நிலையில் அவர் வெளியுறவு செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள டேவிட் கேமரூனை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு வாழ்த்துக்களையும் ஜெய்சங்கர் கூறினார்.
இஸ்ரேல், காசா மோதல் உக்ரைன், ரஷ்யா போர் உள்ளிட்ட உலகளாவிய சவால்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக இங்கிலாந்து வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
உலக வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் முக்கியத்துவத்தையும் அவர்கள் எடுத்துரைத்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இங்கிலாந்து-இந்தியா உறவின் வலிமையையும் அவர்கள் பிரதிபலித்ததாகவும், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் கூட்டுறவை முன்னேற்றுவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டதாக அவர் கூறினார்.