அடுத்த தலாய் லாமா யார்? : சீனாவின் எதிர்ப்பால் எழுந்த புதிய சர்ச்சை!
Jul 22, 2026, 06:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அடுத்த தலாய் லாமா யார்? : சீனாவின் எதிர்ப்பால் எழுந்த புதிய சர்ச்சை!

Murugesan M by Murugesan M
Jul 3, 2025, 08:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரும் ஜூலை 6 ஆம் தேதி தனது 90வது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் 14 வது தலாய் லாமா,  தனது வாரிசைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம், காடன் போட்ராங் அறக்கட்டளைக்கு மட்டுமே உள்ளது என்றும், இந்த விஷயத்தில் தலையிட வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். சீனாவின் எதிர்ப்பையும் அவர் புறக்கணித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

1935 ஆம் ஆண்டு, ஜூலை 6 ஆம்  தேதி,  வடகிழக்கு திபெத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த குழந்தைக்கு லாமோ தொண்டப் என்று பெயரிடப் பட்டது. இந்த அற்புத குழந்தைக்கு இரண்டு வயதான போது,   முந்தைய தலாய் லாமாவின் மறுபிறவியாக அடையாளம் காணப் பட்டது.

மூத்த துறவிக்குக் காட்டப்பட்ட தெய்வக் காட்சி உட்பட பல அறிகுறிகளின் அடிப்படையில், லாமோ தொண்டப் அடுத்த தலாய் லாமாவாக, திபெத்திய அரசால் அனுப்பப்பட்ட குழு முடிவு செய்தது. 13வது தலாய் லாமாவின் உடைமைகளை “இது என்னுடையது, இது என்னுடையது” என்ற சொற்றொடருடன் குழந்தை அடையாளம் கண்டபோது இந்தக் குழந்தை தான் அடுத்த தலாய் லாமா என்பது உறுதி செய்யப்பட்டது.

1940ம் ஆண்டு குளிர்காலத்தில், லாமோ தொண்டப், இன்றைய திபெத் தன்னாட்சிப் பகுதியின் தலைநகரான லாசாவில் உள்ள பொட்டாலா அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, திபெத்தியர்களின் மதத் தலைவராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார்.

திபெத்தில் இருந்து 1959-ஆம் ஆண்டு நாடு கடத்தப்பட்டதை அடுத்து இமாச்சலப் பிரதேசத்தின் தர்ம சாலாவில் 14வது தலாய் லாமா வசித்து வருகிறார். தலாய் லாமாவின் பாரம்பரியம் மற்றும் நிறுவனத்தைப் பராமரிக்கவும், வளர்க்கவும், பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக, காடன் போட்ராங் அறக்கட்டளையை தலாய் லாமா உருவாக்கினார்.

ஏற்கெனவே, தலாய் லாமா தனது 90வது பிறந்தநாளின் போது தனது வாரிசுரிமை பற்றிய விவரங்களை வெளியிடுவதாக எழுதியுள்ளார். மேலும் அடுத்த தலாய் லாமாவாக யாரை தனது வாரிசாக அறிவிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு உலக அளவில் எழுந்துள்ளது.

இந்நிலையில் தான், தனது அறக்கட்டளை தொடரும் என்றும், அறக்கட்டளை தவிர வேறு யாருக்கும் அடுத்த தலாய் லாமாவைத் தேர்ந்தெடுக்கும் உரிமையோ அதிகாரமோ இல்லை என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 1989ம் ஆண்டு  ஏப்ரல் 25ம் தேதி திபெத்தின் லாரி கவுண்டியில் பிறந்த கெதுன் சோக்கி நியாமாவை 11வது பஞ்சன் லாமாவாக அறிவித்தார். அப்போது,கெதுன் சோக்கி நியாமாவுக்கு ஆறு வயதுதான்.

11வது பஞ்சன் லாமாவாக அங்கீகரிக்கப்பட்ட  மூன்று நாட்களுக்குப் பிறகு,கெதுன் சோக்கி நியாமாவும்   அவரது குடும்பத்தினரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியால் கடத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து, 1996 ஆம் ஆண்டில், சீனா கியான்கைன் நோர்புவை அதிகாரப்பூர்வ பஞ்சன் லாமாவாக சீனா நியமித்தது. அவரது பெற்றோர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நியமனத்தை திபெத்தியர்கள் மற்றும் சர்வதேச பார்வையாளர்கள் பரவலாக நிராகரித்தனர்.

பாதுகாப்பு குறித்த கவலைகளை காரணம் காட்டி, 11வது பஞ்சம் லாமாவும் அவரது குடும்பத்தினரும் இரகசிய இடத்தில் பத்திரமாக அடைத்து வைத்திருப்பதாக சீன அரசு  உறுதிப்படுத்தியது. இருப்பினும், கடந்த 30 ஆண்டுகளாக, கெதுன் சோக்கி நியாமாவின் இருப்பிடம் மற்றும் நிலை யாருக்கும் தெரியவில்லை. ஒருவர் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டு, மிக நீண்ட காலமாகக் காணாமல் போன சம்பவங்களில் இது முக்கியமானதாகும்.

கடந்த மே 25ம் தேதி, 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆறு வயதில் சீன அதிகாரிகளால் கடத்தப்பட்ட 11வது பஞ்சன் லாமாவான கெதுன் சோக்கி நியாமாவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தனது எக்ஸ் தளத்தில்  தெரிவித்திருந்தார்.

2007 ஆம் ஆண்டில்,  அடுத்த தலாய் லாமாவைத் தேர்ந்தெடுக்க புதிய விதிமுறைகளைச் சீனா விதித்துள்ளது. அதன்படி, சீனாவில் பிறந்திருந்தால் மட்டுமே ஒருவர் தலாய் லாமாவாக தேர்ந்தெடுக்கப் பட முடியும் என்றும்  அடுத்த தலாய் லாமா, தான் சீனாவில் பிறந்தற்கான ஒப்புதலைச் சீன அரசிடம் பெறவேண்டும் என்றும் சீனாவின் புதிய விதிமுறை சொல்கிறது.

மேலும், தலாய் லாமாவின் மறுபிறவிகளும்  தங்கக் கலசம் முறைப்படியே  தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் சீனா கூறியுள்ளது. இந்தச் சூழலில், கடந்த புதன்கிழமை, அறக்கட்டளை தொடரும் என்று அறிவித்திருப்பது, இவர் தான் கடைசி தலாய் லாமா என்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

தலாய் லாமாவின்  வாரிசுரிமை, சீன சட்டங்கள், விதிமுறைகள், மதச் சடங்குகள் மற்றும் வரலாற்று மரபுகளுக்கு இணங்க வேண்டும் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தலாய் லாமாவின் வாரிசைத் தேர்ந்தெடுப்பதில் சீனா செல்வாக்கு செலுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: சீனாஅடுத்த தலாய் லாமா யார்?Who will be the next Dalai Lama?: New controversy sparked by China's oppositionபுதிய சர்ச்சைதலாய் லாமா
ShareTweetSendShare
Previous Post

மாத்தி யோசித்ததால் வெற்றி : டிராகன் பழம் பயிரிட்டு லாபத்தை குவிக்கும் விவசாயி!

Next Post

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

Related News

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

கொசு தொல்லைக்கு வருகிறது நிரந்தர தீர்வு : ஏஐ மைக்ரோ டிரோன் தயார் – சிறப்பு தொகுப்பு!

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

சவுதியை தொடர்ந்து குவைத்தையும் வளைக்க பாகிஸ்தான் முயற்சி : பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த பேச்சுவார்த்தை : சிறப்பு தொகுப்பு!

51 மதிப்பெண்ணில் தொடங்கிய பயணம் : விண்வெளியில் இந்தியாவின் புதிய மைல்கல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies