தமிழ் மற்றும் மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகர் கலாபவன் மணி மரணத்தில் புதைந்துள்ள மர்மம் குறித்து சிபிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ், மலையாளம் திரையுலகில் பிரபலமான வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் கலாபவன் மணி. இவர் கடந்த 2019 -ம் ஆண்டு மார்ச் 3 -ம் தேதி
தனது பண்ணை வீட்டில் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டு இருக்கும்போது மயங்கி விழுந்தார். இதனால், அருகில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால், கலாபவன் மணி மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், அவரது உடல் உடற்கூறாய்வின்போது, பயிர்களுக்கு அடிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து இருந்தது தெரிய வந்தது. இதனால், இந்த வழக்கு சி.பி.ஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.
கலாபவன் மணி மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் மரணம் குறித்த மர்மம் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த வகையில், கலாபவன் மணி மரணம் தொடர்பாகக் கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம், சி.பி.ஐ சார்பில் 35 பக்க அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், கலாபவன் மணி தினமும் 12 முதல் 13 பாட்டில் பீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர். இதுவே அவரது மரணத்திற்குக் காரணம். கடந்த காலத்தில், அளவுக்கு அதிகமாக அவர் பீர் குடித்ததால் அவரது கல்லீரல் செயலிழந்தது. ரத்த வாந்தியும் எடுத்துள்ளார். ஆனாலும், அவர் குடிக்கும் பழக்கத்தை கைவிடவில்லை. தனது மரணத்தை அவர் தானே தேடிக்கொண்டார்.
மரணமடைந்த மார்ச் 6 -ம் தேதி 12 பாட்டில் பீர் குடித்துள்ளார், அதில் மெத்தல் ஆல்கஹால் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை விசாரணைக் குழுவைச் சேர்ந்த உன்னிராஜன் என்ற ஐ.பி.எஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.