தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கையையொட்டி நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் அந்தமானை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவி வருகிறது.
இதன் காரணமாக, வட கடலோர பகுதிகள், டெல்டா மற்றும் வட தமிழகத்தில் பரவலாக மிதமானது முதல் சற்று கனமழையும், மிக கனமழையும் மற்றும் தொடர் மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்,
உள்தமிழகம், வட உள்தமிழகம், மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதனை யொட்டிய பகுதிகளிலும் தென்தமிழகத்திலும் மிதமானது முதல் சற்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இதனால், பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு கருதி, அந்த அந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மழைக் காலத்தையொட்டி, விடுமுறை அறிவிக்கப்பட்ட நாட்களை ஈடுகட்ட, மழைக்காலம் முடிந்த பின்னர் வரும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை, அந்த அந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரே முடிவு எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.