இந்தியாவின் இசை வரலாறு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பரிணமித்த தாளங்கள் மூலம் எதிரொலிக்கும் பன்முகத்தன்மையின் சிம்பொனியாகும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சித்தார் மீது சிங்கப்பூர் துணைப் பிரதமரின் ஈடுபாட்டிற்குப் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
சிங்கப்பூர் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்க்-இன் சித்தார் இசை முயற்சிக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் வோங்க்-இன் இடுகைக்கு பதிலளித்து மோடி பதிவிட்டுள்ளதாவது,
May your passion for the Sitar continue to grow and inspire others. Best wishes on this melodious endeavour. India's musical history is a symphony of diversity, echoing through rhythms that have evolved over millennia. @LawrenceWongST https://t.co/fewFAquSZL
— Narendra Modi (@narendramodi) November 14, 2023
“சித்தார் மீதான உங்கள் ஆர்வம் தொடர்ந்து வளர்ந்து, மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கட்டும். இந்த இனிய முயற்சிக்கு வாழ்த்துகள். இந்தியாவின் இசை வரலாறு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பரிணமித்த தாளங்கள் மூலம் எதிரொலிக்கும் பன்முகத்தன்மையின் சிம்பொனியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.