மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஜயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது.
மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (நவ 15)மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கிறார். பின்னர் 18-ம் படிக்கு கீழ் உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்படும்.
பின்னர் நவம்பர் 16ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மண்டல பூஜைக்காக 41 நாட்களுக்கு நடை திறக்கப்பட்டு டிசம்பர் 27ஆம் தேதி நடை அடைக்கப்படும்.
பின்னர் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும். இந்நிலையில், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையில் பங்கேற்க, பக்தர்கள் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யலாம் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் சுமார் 7, 500 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.