இன்று உலக சி.ஓ.பி.டி. தினம். அதாவது இன்று நுரையீரல் அடைப்பு நோய் தினம்.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 3 வது புதன்கிழமை சி.ஓ.பி.டி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
உலகளவில் மூன்றாவது உயிர்க்கொல்லி நோயாக, இந்தியாவில் 2வது உயிர்க்கொல்லி நோயாக சி.ஓ.பி.டி., நோய் மாறிவருகிறது.
சி.ஓ.பி.டி., என்பது நுரையீரலில் ஏற்படும் தொடர் வீக்கம். நுரையீரலிலிருந்து சுவாசக் காற்று தடைபடுவதால் சுவாசப்பிரச்னை ஏற்படுகிறது. இது தடுக்கக்கூடிய, சிகிச்சையளிக்கக்கூடிய நோய் தான். சி.ஓ.பி.டி.,யால் கண்டறியப்பட்டவர்கள் மூச்சுத்திணறல், இருமல் போன்ற சிரமங்களுடன் தினசரி வாழ்க்கையை மேற்கொள்கின்றனர்.
மூச்சுத்திணறல் அதிகரிப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. நுரையீரலில் இருந்து காற்று வெளியேறாமல் அங்கேயே தங்கிவிடும். இதனால் ஆல்வியோலர் பைகள் சேதமடையும்.
குழந்தைகள் முழுதாக வளர்ச்சியடைந்த நுரையீரலுடன் பிறப்பதில்லை. குழந்தை பிறந்து வளர்வது முதல் அக்குழந்தையின் 20 வயது வரையில் நுரையீரல் படிப்படியாக முழு வளர்ச்சியை அடையும்.
நுரையீரல் வளரும் போது குழந்தைகள் நச்சுப்புகையை சுவாசிக்க நேரிட்டால் அல்லது சுவாச தொற்று ஏற்பட்டால் நுரையீரலின் வளர்ச்சித் திறன் குறைந்துவிடும்.
ஆகையால் நல்ல சுற்றமான காற்றை சுவாசித்து நம் நுரையீரலை நாம் தான் பாதுகாக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு சி.ஓ.பி.டி தினத்திற்கும் ஒரு கருப்பொருள் அமைக்கப்படும் அதுப்போல இந்த ஆண்டின் கருப்பொருள் ‘சுவாசமே வாழ்க்கை’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது