ஊழலுக்கு பெயர் பெற்றது காங்கிரஸ்: ஜே.பி நட்டா கடும் தாக்கு!
Sep 22, 2026, 05:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழலுக்கு பெயர் பெற்றது காங்கிரஸ்: ஜே.பி நட்டா கடும் தாக்கு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 15, 2023, 11:38 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காங்கிரஸ் கட்சி ஊழல், குடும்பவாதம் மற்றும் வம்சவாதம் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் வருகிற 17-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதனால், இரு கட்சித் தலைவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் மத்தியப் பிரதேச மாநிலம் போஜ்பூரில் பேரணி நடந்தது. இப்பேரணியில் கலந்துகொண்ட பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா பேசுகையில், “காங்கிரஸ் கட்சி இன்று ஊழலுக்கும், குடும்பவாதத்திற்கும், வம்சவாதத்திற்கும் பெயர் பெற்றிருக்கிறது. அதேசமயம், பா.ஜ.க. வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் உங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதில் பெயர் பெற்றிருக்கிறது..

ஒருபுறம் வளர்ச்சியுடன் இணைந்து கொள்கைகளை மாற்ற நினைக்கும் பா.ஜ.க., மறுபுறம் உங்களுக்கு துரோகம் செய்து உங்களது உரிமைகளை பறித்து தனது கஜானாவை நிரப்ப நினைக்கும் காங்கிரஸ் கட்சி. ஊழலுக்கு பெயர் போனது காங்கிரஸ். யாரோ நான் ஜானேயு தாரி (பூணூல் அணிபவர்) என்று கூறுகிறார்கள். ஆனால், அவருக்கு பூணூலே அணியத் தெரியாது.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, நாங்கள் ​அயோத்தியில் கோவில் கட்டுவோம் என்று சொன்னபோது, இராமர் என்பது கற்பனை கதாபாத்திரம், அதற்கு அறிவியல் அடிப்படையும் இல்லை, இராமருக்கு சரித்திர அடிப்படையும் இல்லை என்று நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் கொடுத்தனர். ஆனால், தற்போது ​​புதிய காங்கிரஸ் தலைவர், இராமரின் காலடியில் விழுந்து கிடக்கிறார் என்பது வேறு விஷயம்.

காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாடல் உள்ளது. அதுதான் ‘லாபடா மாடல்’ (காணாமல் போன மாடல்). காங்கிரஸ் ஆட்சியில் குடிநீர், வளர்ச்சி, மின்சாரம், சாலைகள் என எதையும் காணவில்லை. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் பணியை கமல்நாத் செய்தாரா? நலத்திட்டத்தை நிறுத்தினார். ஆனால், சிவராஜ் சிங் அரசு 600 கோடி ரூபாய் கொடுத்து மீண்டும் சம்பல் யோஜனாவை துவக்கியது” என்றார்.

Tags: ElectionJ.P.NaddaMadya PradeshCompaign
Share
Tweet
SendShare
Previous Post

உலக சி.ஓ.பி.டி. தினம் !

Next Post

சுதந்திரப் போராட்ட தியாகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்!

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies