இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்கள் தான் காரணம் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான பொது நல மனு இலங்கை உச்ச நீதின்ற நீதிபதி ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே ஆகியோர் கடந்த ஆண்டு நாட்டை திவால் நிலைக்கு இட்டுச் சென்ற நெருக்கடிக்கு காரணமானவர்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், மத்திய வங்கி முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் பேராசிரியர் .லக்ஷ்மன், முன்னாள் நிதிச் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, முன்னாள் அதிபரின் செயலாளர் . ஜயசுந்தர மற்றும் மத்திய வங்கியின் நாணய சபை உறுப்பினர்கள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாகவும் நீதிபதிகள் கூறினர்.
பொதுநலன் கருதி நீதிமன்றத்தை அணுகியதாலும், இழப்பீடு கோராததாலும், மனுதாரர்களுக்கு ஏற்படும் செலவுகளைத் தவிர வேறு இழப்பீடு வழங்க உத்தரவிட நீதிமன்றம் உத்தரவிடவில்லை.