சரஸ் என்ற குறும்படம் பலரது புருவத்தையும் உயர வைத்துள்ளது. காரணம், சர்வதேசத் திரைப்பட விழாக்களில் 70-க்கும் மேற்பட்ட விருதுகளை அள்ளியுள்ளது.
பொருளாதார ரீதியாக பலவீனமான சரஸ்வதி என்ற பெண், தனது மகனை எப்படி உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனத்தில் படிக்க வைக்கிறார் என்பது பற்றி சொல்கிறது சரஸ் என்ற குறும்படம்.
இந்த குறும்படத்தில், நீலிமா ராணி, என்.ஸ்ரீகிருஷ்ணா, வினைதா சிவகுமார், டாக்டர். எஸ்.கே.காயத்ரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் கலக்கியுள்ளனர். இந்த படத்தை சூட் பீட்டர் நேமியான் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஒரு பட்டய கணக்காளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் முதலில் ‘சஷ்தி’ என்ற குறும்படத்தை இயக்கினார். இந்த படம், கடந்த ஆண்டு 35 சர்வதேச பட விழாக்களில் 75 -க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றது.
இந்த நிலையில், சரஸ் குறும்படத்தை இயக்கியுள்ளார். இதுவும் சர்வதேச பட விழாக்களில் 70-க்கும் மேற்பட்ட விருதுகளை அள்ளிக்குவித்துள்ளது. சஷ்தி மற்றும் சரஸ் திரைப்படங்கள் பற்றிய விவரங்கள் IMDB என்ற இணையதளப் பக்கங்களில் காணலாம்.