ஜார்க்கண்ட் மாநில நிறுவன தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மாநிலத்தின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு அவர் வாழ்த்து கூறியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
“ஜார்க்கண்ட் அதன் கனிம வளங்கள் மற்றும் பழங்குடி சமூகத்தின் தைரியம், சுயமரியாதைக்கு பெயர் பெற்றது. இங்குள்ள எனது குடும்ப உறுப்பினர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
மாநிலத்தின் நிறுவன தினத்தில் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், மாநிலத்தின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் வாழ்த்துகளை கூறுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.