நாட்டின் 4 தூண்கள் எவை? பிரதமர் மோடி புதிய விளக்கம்!
Oct 17, 2026, 07:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் 4 தூண்கள் எவை? பிரதமர் மோடி புதிய விளக்கம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 15, 2023, 03:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஏழை மக்கள் ஆகியோர்தான் நாட்டின் 4 தூண்கள். இந்த 4 தூண்களும் வளர்ச்சி அடையும்போது நாடு வளர்ச்சி அடையும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி புதிய விளக்கம் அளித்திருக்கிறார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஜார்க்கண்ட் மாநிலத்திற்குச் சென்றிருக்கிறார். அங்கு, ராஞ்சியில் அமைந்திருக்கும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் அருங்காட்சியகம் மற்றும் பிர்சா முண்டா நினைவு அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

தொடர்ந்து, பி.எம். கிசான் திட்டத்தின் கீழ், 15-வது தவணைத் தொகையாக 2,000 ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு 15-வது தவணைத் தொகையை வெளியிட்டார். பின்னர், குந்தி மாவட்டத்தில் நடந்த பேரணியில் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “பழங்குடியினரின் பெருமை தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இன்றைய நாள் நல்ல அதிர்ஷ்டம் நிறைந்த நாளாகும். பிர்சா முண்டா நினைவுப் பூங்கா மற்றும் சுதந்திரப் போராளிகள் அருங்காட்சியகத்தைப் பார்வையிடும் வாய்ப்புக் கிடைத்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த அருங்காட்சியகத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.

மேலும், இந்த விக்சித் சங்கல்ப் யாத்திரை இன்று தொடங்கி ஜனவரி 26-ம் தேதி வரை நடைபெறும். இந்த யாத்திரை நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லும். இதன் மூலம் ஒவ்வொரு கிராமத்திற்கும் மத்திய அரசே நேரடியாகச் செல்கிறது. மேலும், இந்த யாத்திரையின்போது ஒவ்வொரு ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட நபரும் அரசு திட்டங்களின் பயனாளிகளாக ஆக்கப்படுவார்கள்.

பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஏழை மக்கள் ஆகியோர்தான் நாட்டின் 4 தூண்கள். இந்த 4 தூண்களும் வளர்ச்சி அடையும்போது நாடும் வளர்ச்சி அடையும். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 13 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டிருக்கிறார்கள். ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் பரிசாகக் கிடைத்திருக்கிறது.

விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் 13,000 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டிருக்கிறது. 15,000 கோடி வரை கால்நடைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. பல தசாப்தங்களாக சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மை பற்றி நம் நாட்டில் நிறைய பேசப்படுகிறது. ஆனால், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் எதிரான பாகுபாடுக்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் அகற்றப்படும்போதுதான் உண்மையான மதச்சார்பின்மை வரும்” என்றார்.

Tags: PM ModiJharkhand
Share
Tweet
SendShare
Previous Post

பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாள்! – பிரதமர் மோடி மரியாதை

Next Post

ஜார்க்கண்ட் மாநில நிறுவன தினம்! – பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies