டாடா சன்ஸ் குழும புதிய தலைவர் யார்? : சந்திரசேகரன் ராஜினாமா செய்தது ஏன்? - சிறப்பு தொகுப்பு!
Aug 14, 2026, 08:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டாடா சன்ஸ் குழும புதிய தலைவர் யார்? : சந்திரசேகரன் ராஜினாமா செய்தது ஏன்? – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 14, 2026, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் தம்முடைய பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் பின்னணியை விளக்கும் செய்தித்தொகுப்பை தற்போது காணலாம்…

டாடா குழுமம் இந்தியாவின் மிகவும் பழமையான மற்றும் மிகப்பெரிய பன்னாட்டு வணிகக் குழுமங்களில் ஒன்றாகும்.

இதன் தாய் நிறுவனமான டாடா சன்ஸ், டாடா குழுமத்தில் உள்ள பல்வேறு முக்கிய நிறுவனங்களின் பங்குகளை நிர்வகித்து வருகிறது. தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகரன், 1987-ஆம் ஆண்டு பொறியாளராக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். தம்முடைய அயராத உழைப்பால் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பொறுப்பேற்றார்.

சிறந்த நிர்வாகத்தின் காரணமாக டாடா குழும நிறுவனங்கள் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தன. இதையடுத்து, 2022-ஆம் ஆண்டு மேலும் 5 ஆண்டுகள் பதவி நீட்டிக்கப்பட்டது. இரண்டாவது பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதியுடன் நிறைவடையும் சூழலில், சந்திரசேகரனின் பதவிக்காலத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க டாடா அறக்கட்டளை பரிந்துரைத்தது.

ஆனால் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெற்ற டாடா சன்ஸ் இயக்குநர் குழு கூட்டத்தில் ஒரு உறுப்பினர் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், சந்திரசேகரன் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். ஆனால், அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை அப்பதவியில் நீடிப்பார். டாடா அறக்கட்டளைகள் தலைவர் நோயல் டாடாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டம் ஆகஸ்ட் 18-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், புதிய தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் டாடா சன்ஸ் குழுமத்தின் புதிய தலைவருக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன. ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை நடப்பாண்டில் 22 ஆயிரத்து 238 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளன.

விமானங்களை நவீனமயமாக்குவது, விஸ்தாரா நிறுவனத்துடன் இணைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்றாலும், விமானப் போக்குவரத்தில் லாபத்தை ஈட்ட பல ஆண்டுகளாகும் என கணிக்கப்பட்டுள்ளது. டிசிஎஸ் நிறுவனம், தற்போது AI யுகத்தின் மிகப்பெரிய தொழில்நுட்ப மாற்றங்களை எதிர்கொண்டுள்ளது.

ஆன்லைன் வர்த்தகத் துறையில் கடுமையான போட்டி நிலவும் சூழலில், பிக்பேஸ்கெட் மற்றும் டாடா நியூ(Tata Neu) தளம் தொடர் இழப்புகளைச் சந்தித்து வருவது டாடா சன்ஸ் குழுமத்திற்கு மிகப்பெரிய சவாலை உருவாக்கியுள்ளது. அதேபோல், சொகுசு கார் தயாரிப்பில் ஜாகுவார் நிறுவனம் தற்போது மின்சார வாகனங்களுக்கு மாறுவது, சீன சந்தையில் கடும் போட்டியை எதிர்கொள்வது போன்ற சவால்களை எதிர்நோக்கியுள்ளது.

இந்தியாவில் சிப் தயாரிப்பு மற்றும் மின்னணு உற்பத்தித் துறையில் டாடா சன்ஸ் செய்துள்ள பலகோடி ரூபாய் முதலீடுகள், நீண்ட காலத்திற்குப் பிறகே பலனளிக்கும். மற்ற நிறுவனங்களின் இழப்புகளுக்கு மத்தியில் இதை சமாளிப்பது புதிய தலைவருக்கு மிகப்பெரிய சோதனையாக இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, டாடா அறக்கட்டளைகள் மற்றும் டாடா குழுமம் நிர்வாகத்திற்கு இடையே நல்லுறவைப் பேணுவதும் டாடா சன்ஸ் புதிய தலைவரின் மிக முக்கியமான நிர்வாகப் பணியாக இருக்கும்.

இந்த சூழலில், டாடா சன்ஸ் குழுமத்தில் நிலவும் தற்போதைய சவால்களை சமாளித்து, டாடா நிறுவனங்களை லாபகரமானதாக மாற்றும் திறன் கொண்ட புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tags: who is next tata ChairmanTata Consultancy ServicesTata GroupChandrasekaranChairman of Tata Sons
Share
Tweet
SendShare
Previous Post

நடுவானில் திகில் சம்பவம் : சட்டென 300 அடி சரிந்த Air India விமானம் : சிறப்பு தொகுப்பு!

Related News

நடுவானில் திகில் சம்பவம் : சட்டென 300 அடி சரிந்த Air India விமானம் : சிறப்பு தொகுப்பு!

ஜஸ்டின் மணிகண்டன் ரத்தக்குழாய்களில் இரு இடங்களில் அடைப்பு – மருத்துவர்கள் உறுதி!

பெரம்பலூர் அருகே தேரில் மின்சாரம் பாய்ந்து இருவர் பலி!

சென்னை உயர்நீதிமன்ற சுதந்திர தின கொண்டாட்டம் : முதலில் வந்தே மாதரம் பாடப்படும் என அறிவிப்பு!

தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்பாட்டம் – தஞ்சையில் இபிஎஸ் பங்கேற்பு!

கரூர் விவகாரம் : அரசு பணி ஆணை ரத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

Load More

அண்மைச் செய்திகள்

டாடா சன்ஸ் குழும புதிய தலைவர் யார்? : சந்திரசேகரன் ராஜினாமா செய்தது ஏன்? – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

கெருகம்பாக்கம் ஊராட்சியில் 14 லட்சம் பறிமுதல் – தலைவர், துணைத்தலைவர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

வட்டி விகிதங்களில் கூடுதல் வெளிப்படைத்தன்மை – ரிசர்வ் வங்கி புதிய விதிமுறை!

தமிழக வாகன ஓட்டிகளுக்கு பூக்களை கொடுத்து காதில் வைக்க சொன்ன கன்னட அமைப்புகள்- மேகதாது போராட்டத்தின் போது அத்துமீறல்!

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 5 மணி நேரம் மின்தடை – நோயாளிகள் அவதி!

திருவாரூர் அருகே குளத்தில் சோலார் பேனல் – புதிய நீர்ப்பாசன திட்டம் தொடக்கம்!

அதிமுக சார்பில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க போவதில்லை – எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!

சங்கீத நாடக அகாடமி விருது -குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்!

காவிரி விவகாரம் – கன்னட அமைப்புகள் நடத்திய முழு அடைப்புப் போராட்டம் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies