திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கும் நிலையில், இன்று முருகர் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
அண்ணாமலையார் கோவில் மாட வீதிகளில் திருமலை திருப்பதியில் உள்ளதைப்போல் கான்கிரீட் சிமெண்டு சாலை அமைக்கும் பணி கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் பணிகள் நிறைவடைந்த நிலையில், புதிய சாலையில் இன்று காலை 5.30 மணிக்கு முருகர் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதனிடையே நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.45 மணியில் இருந்து 6.12 மணிக்குள் அருணாசலேஸ்வரர் சன்னதியில் உள்ள தங்க கொடி மரத்தில் கார்த்திகை தீப கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தீப தரிசன நாளான 26 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு 2668 அடி உயரமுள்ள அருணாசலேஸ்வரர் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.