இந்தப் போட்டியில் சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாடிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அபய் சிங், தன்வி கண்ணா, அனாஹத் சிங் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
79 வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் இன்று சென்னையில் தொடங்குகின்றது. இன்று முதல் 23 ஆம் தேதி வரை தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறயுள்ளது.
இதில் 25 மாநிலங்களைச் சேர்ந்த 419 வீரர்கள், வீராங்கனைகள் 11 வகை பிரிவுகளில் பங்கேற்கவுள்ளன.
மேலும் இந்தப் போட்டியில் சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாடிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அபய் சிங், தன்வி கண்ணா, அனாஹத் சிங் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
இந்த தொடரில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் 8 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் சென்னையில் 7-வது முறையாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.