உலகக்கோப்பை இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 48 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 47 போட்டிகள் முடிவடைந்துள்ளது.
நவம்பர் 19 ஆம் தேதி இறுதிப்போட்டி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடவுள்ளனர்.
இந்நிலையில் இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
விமானப்படையின் சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழு 10 நிமிடங்கள் விமான சாகசத்தில் ஈடுபடும் என்றும் இதற்கான ஒத்திகை இன்றும், நாளையும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையின் சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழு பொதுவாக ஒன்பது விமானங்களைக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமான கண்காட்சிகளில் அதன் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.