கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஏமன் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கேரளாவை சேர்ந்தவர் நிமிஷா. இவர் ஏமன் நாட்டில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். இந்த தன்னுடைய பாஸ்போட்டை மீட்கும் முயற்சியில் ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருக்கு மயக்க மருந்து கொடுத்த கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கில் 2017ஆம் ஆண்டு நிமிஷாவுக்கு அந்நாட்டு விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தற்போது அவரின் மேல்முறையீட்டு மனுவும் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஏமன் செல்வது தொடர்பாக பிரியாவின் தாயாரின் கோரிக்கை மீது ஒரு வாரத்திற்குள் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏமனில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் காரணமாக 2017 ஆம் ஆண்டு முதல் இந்தியர்கள் அங்கு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய அறிவிப்பின் கீழ், குறிப்பிட்ட காரணங்களுக்காகவும், குறிப்பிட்ட கால அளவுகளுக்காகவும் ஏமன் பயணத் தடை தளர்த்தப்படலாம் என்று மத்திய அரசின் வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.