100 கோடி பேரை சென்றடைந்த மன் கி பாத்: ஐ.ஐ.எம். ஆய்வில் தகவல்!
Mar 19, 2026, 02:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

100 கோடி பேரை சென்றடைந்த மன் கி பாத்: ஐ.ஐ.எம். ஆய்வில் தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 18, 2023, 03:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சி நாட்டின் 96 சதவிகித மக்களை, அதாவது 100 கோடி பேரை சென்றடைந்திருப்பதாக இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.எம்.) நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

2014-ம் ஆண்டு மே மாதம் பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டார். இதன் பிறகு, அந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்கிற நிகழ்ச்சியின் மூலம், அகில இந்திய வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் 100-வது எபிசோடு கடந்த ஏப்ரல் மாதம் ஒலிபரப்பானது.

இந்த நிலையில்தான், மனதின் குரல் நிகழ்ச்சி தொடர்பாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகமும், ரோத்தக் ஐ.ஐ.எம். (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்) நிறுவனமும் இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டன. இதில்தான், மனதின் குரல் நிகழ்ச்சி 100 கோடி இந்தியர்களை சென்றடைந்திருப்பது தெரியவந்திருக்கிறது.

இதுகுறித்து அந்நிறுவனம் கூறுகையில், “நாட்டின் சுமார் 96 சதவீத மக்கள் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி பற்றி அறிந்திருக்கிறார்கள். இந்நிகழ்ச்சி 100 கோடி மக்களை சென்றடைந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சி பற்றி மக்கள் அறிந்திருப்பதுடன், ஒரு முறையாவது நிகழ்ச்சியை கேட்டிருக்கிறார்கள்.

மொத்தம் 23 கோடி பேர் நிகழ்ச்சியை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து கேட்கிறார்கள். அதேபோல, 41 கோடி பேர் எப்போதாவது கேட்கிறார்கள். இவர்களும் வழக்கமான நேயர்களாக மாற்றப்படுவதற்கான வாய்ப்பை இந்நிகழ்ச்சி கொண்டிருக்கிறது. மேலும், இந்நிகழ்ச்சியைக் கேட்பவர்களில் பெரும்பாலானோர் அரசின் செயல்பாடுகள் பற்றி அறிந்திருக்கிறார்கள்.

73 சதவீதம் பேர் நாடு முன்னேறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். கருத்துக் கேட்கப்பட்டவர்களில் 58 சதவீதம் பேர் தங்கள் வாழ்க்கை நிலைமை மேம்பட்டுள்ளதாகக் கூறியிருக்கிறார்கள். 59 சதவீதம் பேர் அரசின் மீதான நம்பிக்கை அதிகரித்திருப்பதாகக் கூறியிருக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, பிரதமர் மோடி இம்மாதம் 26-ம் தேதி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசவிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் வெளிப்படுத்த வேண்டிய தகவல்கள் இருந்தால் பிரதமர் மோடிக்கு தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மத்திய அரசின் தகவல் தொடர்பை பயன்படுத்தி மக்கள் தங்களது கருத்தைச் சொல்லலாம் என்று தெரிவித்திருக்கிறது.

Tags: PM ModiMaan ki baat100 crore people
ShareTweetSendShare
Previous Post

மக்கள் பிரச்சினையை மறந்த திமுக : நயினார் நாகேந்திரன்

Next Post

மும்பையில் ஆதித்ய தாக்கரே மீது வழக்குப் பதிவு!

Related News

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies