இந்திய ராணுவத்தின் 243-வது பொறியாளர் தினம் நவம்பர் 18ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக இன்ஜினியர்-இன்-சீஃப் லெப்டினன்ட் ஜெனரல் அரவிந்த் வாலியா, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
ராணுவத்தின் இந்த பொளியாளர் குழு ஆயுதப் படைகள் மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறது மற்றும் நாட்டின் பரந்த எல்லைகளில் இணைப்பைப் பராமரிப்பதாக தெரிவித்தார்.
கார்ப்ஸ் ஆஃப் இன்ஜினியர்ஸ் மூன்று குழுக்களைக் கொண்டுள்ளது. அதாவது மெட்ராஸ் சப்பர்ஸ், பெங்கால் சப்பர்ஸ் மற்றும் பாம்பே சப்பர்ஸ் ஆகிய 3 குழுக்களை கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இயற்கை பேரழிவு உள்ளிட்ட அவசர காலங்களின் போது இந்த குழுக்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் அவர் கூறினார்.