இந்தியப் பெண்களின் வீரத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர் ஜான்ஸிராணி லட்சுமிபாய் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி இருக்கிறார்.
இந்தியாவின் முதல் சுதந்திரப் போரின்போது (1857-58) ஜான்ஸிராணி என்று அழைக்கப்படும் ராணி லட்சுமிபாய் முக்கியப் பங்காற்றினார். 1828-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ம் தேதி பிறந்த ராணி லட்சுமிபாய், 1857-ல் இந்தியக் கிளர்ச்சியின்போது முக்கியப் பங்காற்றிய நபர்களில் குறிப்பிடத்தக்கவராக இருந்தார்.
1858-ல் குவாலியர் அருகே கோட்டா-கி-செராய் என்ற இடத்தில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் சண்டையிட்டு ராணி லட்சுமிபாய் உயிரிழந்தார்.
ராணி லட்சுமிபாயின் பிறந்தநாளான இன்று, அவரது துணிச்சலை நினைவுகூர்ந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்தியப் பெண்களின் வீரத்தின் அடையாளமான ராணி லட்சுமிபாயின் பிறந்தநாளில் அவருக்கு எனது மனமார்ந்த அஞ்சலி.
அவரது துணிச்சல், போராட்டம் மற்றும் தியாகத்தின் கதை, அந்நிய ஆட்சியின் அட்டூழியங்களுக்கு எதிராக நாட்டின் ஒவ்வொரு தலைமுறைக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
भारतीय नारीशक्ति के पराक्रम की प्रतीक रानी लक्ष्मीबाई को उनकी जन्म-जयंती पर मेरा कोटि-कोटि नमन। विदेशी हुकूमत के अत्याचार के खिलाफ उनके साहस, संघर्ष और बलिदान की गाथा देश की हर पीढ़ी को प्रेरित करती रहेगी।
— Narendra Modi (@narendramodi) November 19, 2023