இந்திய அணியின் அடுத்தப் பயிற்சியாளர் யார்? என்ற கேள்வி ஒவ்வொரு ரசிகர்கள் மனதிலும் எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியாவுடன் நேற்று நடைபெற்ற முடிந்த 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியைத் தழுவியது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகச் செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம், நேற்றைய இறுதிப் போட்டியுடன் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது.
இதனால், இந்திய அணியின் அடுத்தப் பயிற்சியாளர் யார் என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்த நிலையில், விவிஎஸ் லக்ஷ்மன், ஐபிஎல் மற்றும் இந்திய அணியில் பயிற்சியாளராகப் பணியாற்றிய அனுபவம் பெற்றவர் என்பதால், அவருக்கு வாய்ப்பு உள்ளதாகவும், முன்னாள் இந்திய தொடக்க வீரர் வீரேந்திர சேவாக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக வரலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, வெளிநாட்டுப் பயிற்சியாளர்களில், ரிக்கி பாண்டிங் மற்றும் ஆண்டி ஃப்ளவர் ஆகியோர் பெயர் பரிசீலனையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.