நாட்டின் 3 எதிரிகளான ஊழல், குடும்பம், சமாதானம் ஆகியவை நம்மிடையே இருக்கும் வரை, நாட்டை வளர்ச்சியடையச் செய்ய முடியாது. ஆனால், இந்த 3 தீமைகளும்தான் காங்கிரஸின் மிகப்பெரிய சின்னமாக இருக்கிறது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
ஆகவே, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தானில் முகாமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பாரன் மாவட்டம் அந்தாவில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பா.ஜ.க. எப்போதும் இங்குள்ள மக்களுடன் மிகவும் சிறப்பான உறவைக் கொண்டிருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. இப்போது ’வளர்ந்த இந்தியா’ என்ற இலக்கை நம் முன் வைத்திருக்கிறோம்.
ராஜஸ்தானை வளர்ச்சியடையச் செய்யாமல் இந்தியாவை வளர்ச்சியடையச் செய்வதன் நோக்கம் முழுமையடையாது. ஆனால், நாட்டின் 3 எதிரிகளான ஊழல், குடும்பம், சமாதானம் ஆகியவை நம்மிடையே இருக்கும் வரை, இத்தீர்மானம் நிறைவேறுவது கடினம். இந்த 3 தீமைகளும்தான் காங்கிரஸின் மிகப்பெரிய சின்னம்.
ராஜஸ்தானின் “லால் டைரி” பற்றி பரவலாகப் பேசப்படுகிறது. இந்த லால் டைரியின் பக்கங்கள் புரட்டப்படுவதால், “மந்திரவாதியின்” முகம் வீழ்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு உங்கள் தண்ணீரை, காடுகளை, நிலங்களை எப்படி விற்றது என்பதை இந்த “லால் டைரி” தெளிவாகக் கூறுகிறது.
காங்கிரஸில் அமைச்சராக இருந்தாலும், எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் அனைவரும் கட்டுப்பாடற்றவர்கள். ராஜஸ்தான் மக்களை கொள்ளையர்கள், கலவரக்காரர்கள் மற்றும் குற்றவாளிகளிடம் காங்கிரஸ் ஒப்படைத்திருக்கிறது. இதனால் மக்கள் எரிச்சலடைந்திருக்கிறார்கள்.
காங்கிரஸ் ஆதரவுடன் சமூக விரோத சக்திகளின் மனோபலம் அதிகமாக இருக்கிறது. ராஜஸ்தானில் மக்கள் தலையை துண்டித்து பகிரங்கமாகக் கொண்டாடுகிறார்கள். ஜாலவாரில் தலித் இளைஞர்களுக்கு நடந்ததை நாடு முழுவதும் பார்த்தது. ராம நவமி, ஹோலி, ஹனுமன் ஜெயந்தி போன்ற பண்டிகைகளை கொண்டாட விடாமல் ராஜஸ்தானில், கலவரம் ஏற்படுத்தப்பட்டது.
சப்ரா கலவர குற்றவாளிகளுக்கு முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. கலவரக்காரர்கள் தவிர, காங்கிரஸ் அமைச்சர்களும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுடன் நெருக்கமாக நிற்கிறார்கள். ராஜஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளில் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்திருக்கிறது.
ராஜஸ்தானில் முதல்வருக்கு நெருக்கமான அமைச்சர்கள், சட்டமன்றத்தில் நின்று குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளிக்கின்றனர். ராஜஸ்தானின் மகள்கள், மாநில அரசிடம் பாதுகாப்பு கேட்டபோது, பொய் வழக்கு போட வேண்டாம் என்று முதல்வர் சொல்கிறார். மகள்களின் கண்ணீரைப் பார்க்க அவர்களுக்கு நேரமில்லை” என்று கூறினார்.