தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் நேற்று நடைபெற்ற கர்நாடகா மற்றும் பீகார் அணிகளுக்கிடையேயானப் போட்டியில் 12-1 கோல் கணக்கில் கர்நாடகா அணி வெற்றிப் பெற்றது.
13 வது தேசிய சீனியர் ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி தொடர் நடைபெற்றுவருகிறது. நவம்பர் 18 தொடங்கிய இப்போட்டிகள் நவம்பர் 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
இதில் நேற்று மொத்தமாக ஐந்து போட்டிகள் நடைபெற்றது.
கர்நாடகா – பீகார் ; உத்தரகாண்ட் – திரிபுரா ; மணிப்பூர் – ஜம்மு-காஷ்மீர் ;பெங்கால் – மத்திய பிரதேசம்; ஆந்திரா – கோவா ஆகிய அணிகளுக்கிடையே போட்டிகள் நடைபெற்றது.
இதில் கர்நாடகா மற்றும் பீகார் அணிகளுக்கிடையே நடைபெற்றப் போட்டியில் 12-1 கோல் கணக்கில் கர்நாடகா அணி வெற்றிப் பெற்றது.
இதில் கர்நாடகா அணியில் முஹம்மது ரஹீல் மௌசீன் 11 மற்றும் 14 வது நிமிடங்களில் தனது 2 கோல்களை அடித்தார். அபரன் சுதேவ் 13 மற்றும் 55 வது நிமிடங்களில் தனது 2 கோல்களை பதிவு செய்தார்.
கௌடா ஷேஷே 15 வது நிமிடத்திலும், என்.ஜி.சோமையா 21 வது நிமிடத்திலும், கோல் அடித்தனர்.
சேதன் மல்லப்பா கரிசிரி 18 மற்றும் 42 வது நிமிடங்களில் தனது 2 கோல்களை பதிவு செய்தார். அதேபோல் ஹரிஷ் முத்தகர் 22 மற்றும் 28 ஆகிய நிமிடங்களில் தனது 2 கோல்களை பதிவு செய்தார்.
லிகித் பிஎம் 27 வது நிமிடத்திலும், பரத் மகாலிங்கப்பா குர்தகோடி 38 வது நிமிடத்திலும், கோல் அடித்தனர். பீகார் அணியின் சார்பாக அபய் குமார் 54 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
பீகார் அணியில் வேறு எந்த வீர்ரகளும் கோல் அடிக்காததால் கர்நாடகா அணி 12-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிப்பெற்றது.