டொமினிகன் குடியரசு நாட்டில் வெள்ளப்பெருக்கு – 21 பேர் பலி!
Mar 15, 2026, 09:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டொமினிகன் குடியரசு நாட்டில் வெள்ளப்பெருக்கு – 21 பேர் பலி!

Murugesan M by Murugesan M
Nov 21, 2023, 06:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டொமினிகன் குடியரசு நாட்டில் பெய்த கனமழையால், ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தலைநகர் சாண்டோ பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து, பெய்து வரும் கனமழையால் அந்நாட்டில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது.

கட்டிடங்களின் தரை தளங்களை வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில், 13 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டன. பாலங்கள் மற்றும் சாலைகள் சேதமடைந்து உள்ளன. பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

மேலும், 2 ஆயிரத்து 600 பேரின் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மொத்தம் 21 பேர் உயிரிழந்தனர். இவர்களில், நெடுஞ்சாலையின் சுரங்க பகுதியில் இருந்த சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், 9 பேர் உயிரிழந்தனர்.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து, நடைபெற்று வருகிறது. மீட்பு குழுவினர் விரைவாக செயல்பட்டு, இதுவரை 2 ஆயிரத்து 500 பேரை மீட்டுள்ளனர்.

Tags: flood
ShareTweetSendShare
Previous Post

தமிழக மீனவர்கள் விடுவிப்பு: விமானம் மூலம் சென்னை வருகை!

Next Post

டெட்ரா பாக்கெட்டுக்குள் தங்கம்: கடத்த முயன்ற நபர் கைது!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies