கால்பந்து தகுதிச்சுற்று : கத்தார் வெற்றி!
Mar 15, 2026, 09:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கால்பந்து தகுதிச்சுற்று : கத்தார் வெற்றி!

Murugesan M by Murugesan M
Nov 22, 2023, 11:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2026 ஆம் ஆண்டு ஆண்களுக்கான கால்பந்து உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதற்கான தகுதிச்சுற்றின் நேற்று நடைபெற்றப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் கத்தார் அணி வெற்றி பெற்றது.

2026 ஆம் ஆண்டு ஆண்களுக்கான கால்பந்து உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதற்கான ஆசிய மண்டல தகுதி சுற்றின் 2 வது சுற்றில் 36 அணிகள் பங்கேற்றுள்ளன.

36 அணிகளும் 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா 2 முறை லீக் போட்டியில் விளையாடவுள்ளன. இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 3 வது சுற்றுக்கு முன்னேறும்.

இந்தியா ‘ஏ’ பிரிவில் கத்தார், குவைத் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்திய அணிக்கான இரண்டாவது போட்டியில், இந்தியா பலம் வாய்ந்த கத்தார் அணியுடன் விளையாடியது.

இந்த ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் இந்திய அணி வீரர்கள் செய்த தவறு காரணமாக கத்தார் அணியின் மாஷல் முதல் கோலை அடித்து அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து கத்தார் அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த, இந்திய அணி வீரர்கள் டிபென்ஸ் மனநிலைக்கு தள்ளப்பட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற முதல் பாதி ஆட்டத்தில் இந்திய அணி வீரர்களால் எந்த கோலும் அடிக்க முடியவில்லை. இதனால் 1-0 என்ற கணக்கில் முதல் பாதி முடிவில் கத்தார் முன்னிலை பெற்றது.

பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்தின் 2வது நிமிடத்திலேயே கத்தார் அணியின் அலி 2வது கோலை அடிக்க, அந்த அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதன்பின் இரண்டாம் பாதி ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் கோல் அடிக்க தீவிரமாக முயற்சித்து வந்தனர். ஆனால் எவ்வளவு முயன்றும் இந்திய அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

86வது நிமிடத்தில் மீண்டும் கத்தார் அணியின் யூசுப் மீண்டும் கோல் அடிக்க, கத்தார் அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இறுதியாக ஆட்ட நேர முடிவில் கத்தார் அணி 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது. ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணியை கத்தார் அணி வீழ்த்திய நிலையில், தற்போது இந்திய அணியையும் வீழ்த்தியுள்ளது.

இதன் மூலமாக குரூப் பிரிவில் கத்தார் அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியா 3 ஆம் இடத்தில் உள்ளது.

Tags: Foot ball
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மக்கள் நம்பவில்லை: ஜெ.பி.நட்டா!

Next Post

பள்ளிப் பாடத்திட்டத்தில் இராமாயணம், மகாபாரதம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies