பகவான் ஸ்ரீ ராமர் பிறந்த இடமான அயோத்தியின் ராம ஜென்ம பூமி அறக்கட்டளை சார்பில், ஸ்ரீ ராம பிரானுக்குப் பிரம்மாண்ட திருக்கோவில் கட்டப்பட்டு வருகிறது.
இந்தக் கோவிலின் பூமி பூஜை கடந்த 2020 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 -ம் தேதி நடைபெற்றது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, கோவிலின் கட்டுமானப்பணிகளைத் துவக்கி வைத்தார்.
அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு வரும் ஸ்ரீ ராமர் கோவில், 2024 -ம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட உள்ளது. இதற்கான முறையான அறிவிப்பை உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
இதனால், கோவிலின் கட்டுமான பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. கோவிலில் சூர்யன், விநாயகர், சிவன், துர்க்கை, விஷ்ணு, பிரம்மா ஆகியோருக்கும் சன்னதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 2024 ஜனவரி மாதம் குடமுழுக்குடன் கோவில் திறக்கப்பட உள்ளது. இதற்கிடையே ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளில் இப்போதே முன்பதிவு நிறைவு பெற்றுள்ளது.