திருச்சியில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி ஜெகனை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
திருச்சியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜெகன். இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 11 வழக்குக்கள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், திருச்சி – பெரம்பலூர் சாலையில் உள்ள சனமங்கலம் வனப்பகுதியில் ரவுடி ஜெகன் என்பவரை காவல்துறையினர் என்கவுண்டர் செய்தனர்.
காவல்துறையினர் மீது ஜெகன் தாக்குதல் நடத்த முயன்றதாகவும், அதனால், தற்பாதுகாப்புக்காகப் போலீசார் அவரை நோக்கி சுட்டதாகவும், அதில் ஜெகன் உயிரிழந்துவிட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இன்னும் சற்று நேரத்தில் ரவுடி ஜெகனின் உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட உள்ளது. இதனால், மருத்துவமனையைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.