13 வது தேசிய சீனியர் ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி தொடர் நடைபெற்றுவருகிறது. நவம்பர் 18 தொடங்கிய இப்போட்டிகள் நவம்பர் 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
இதில் நேற்று மொத்தமாக ஐந்து போட்டிகள் நடைபெற்றது.
சத்தீஷ்கார் – குஜராத் ; டாமன் டையூ – பீகார் ; பெங்கால் – ஜம்மு காஷ்மீர்; ஜார்கண்ட் – சண்டிகார் ; தெலுங்கானா – அருணாசல பிரதேசம்.
இதில் டாமன் டையூ மற்றும் பீகார் அணிகளுக்கிடையேனா போட்டியில் டாமன் டையூ 7-1 என்ற கோல் கணக்கில் பீகாரை வீழ்த்தியது.
இதில் டாமன் டையூ அணி சார்பில் டிர்க்கி அனுப் 25 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அவரைத் தொடர்ந்து தர்மேந்திர பால் 27 மற்றும் 42 ஆகிய நிமிடங்களில் தனது 2 கோலை பதிவு செய்தார்.
பின்னர் 34 வது நிமிடத்தில் தனஞ்சய் பிரஜாபதி ஒரு அடிக்க பின்னர் 3 கோல் தொடர்ந்து டாமன் டையூ அணிக்கு கிடைத்தது. அதில் 40 வது நிமிடத்தில் சிங் அபினவ், 41 வது நிமிடத்தில் சிங் கோமல், 42 வது நிமிடத்தில் தர்மேந்திர பால் என 3 கோல் தொடர்ந்து அடித்தனர்.
பின்னர் 53 வது நிமிடத்தில் அரவிந்த் யாதவ் ஒரு கோல் அடித்தார். அதுவரை பீகார் அணிக்கு ஒரு கோல் கூட கிடைக்காமல் இருந்த நிலையில் 57 வது நிமிடத்தில் ஜோனி குமார் பீகார் அணிக்காக ஒரு கோல் அடித்தார்.
இதனால் ஆட முடிவில் டாமன் டையூ 7-1 என்ற கோல் கணக்கில் பீகாரை வீழ்த்தியது.