ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நினைவடைந்த நிலையில் நேற்று இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கான டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கியது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் தற்போது நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்கிறது. ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக ஸ்டீவன் ஸ்மித் மற்றும் மேட் ஷார்ட் ஆகியோர் களமிறங்கினார்.
தொடங்கும் முதலே இரண்டு வீரரும் தங்களது அதிரடி ஆட்டத்தை தொடக்கவிட்டன. 3 பௌண்டரீஸ் அடித்து அதிரடியாக விளையாடி வந்த மேட் ஷார்ட் 5 வது ஓவரில் 11 பந்துகளுக்கு 13 ரன்களை எடுத்து ரவி பிஷ்னோய் பந்தில் ஆட்டமிழந்தார்.
இவரை தொடர்ந்து அடுத்ததாக களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸ் இந்திய பந்தை பார்க்கவிட்டார். ஸ்மித் மற்றும் ஜோஷ் கூட்டணி சிறப்பாக விளையாடி வந்தது.
இருவரின் கூட்டணியால் ஆஸ்திரேலியா அணியின் ரன்கள் ஏறிக்கொண்டே வந்தது. அப்போது சிறப்பாக விளையாடி வந்த ஸ்டீவ் ஸ்மித் 16 வது ஓவரில் 8 பௌண்டரீஸ் என மொத்தமாக 41 பந்துகளில் 52 ரன்களை அடித்து ரன் அவுட் ஆகினார்.
அப்போது சிறப்பாக விளையாடி வந்த ஜோஷ் இங்கிலிஸ் 11 பௌண்டரீஸ் மற்றும் 8 சிக்சர்கள் என மொத்தமாக 50 பந்துகளில் 110 ரன்களை எடுத்து பிரசித் கிருஷ்ணா பந்தில் ஆட்டமிழந்தார்.
கடைசியாக ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 208 ரன்களை எடுத்தது.
இந்தியாவின் அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா மற்றும் ரவி பிஷ்னோய் தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர். 20 ஓவர்களில் 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருத்ராஜ் களமிறங்கினர்.
முதல் பந்தையே பௌண்டரியாக அடிக்க தொடங்கிய இதையா ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வந்தது. அப்போது 5 வது ஸ்ட்ரைக் எடுக்காமலேயே ருத்ராஜ் ரன் அவுட் ஆகி சென்றார்.
இவரைத் தொடர்ந்து இந்திய அணியின் இஷான் கிஷன் களமிறங்கினார். இஷான் மற்றும் ஜெய்ஸ்வால்
சிறப்பாக விளையாடி வந்த சமயத்தில் 3 வது ஓவரில் ஜெய்ஸ்வால் 2 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 8 பந்தில் 21 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இவரை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் களமிறங்கினார். சூர்யா மற்றும் இஷான் கிஷன் தங்களது அதிரடியான ஆட்டத்தை ஆட தொடங்கினர்.
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியின் ஆதங்கத்தை பந்தின் மூலம் காண்பித்தனர் போலும் ஒவ்வொரு பணத்தையும் அதிரடியாக அடித்து நொருக்கினர்.
இதில் இஷான் கிஷன் தனது அரைசதத்தை பதிவுசெய்தார் அதேபோல் உலகக்கோப்பையில் மோசமாக விளையாடிய சூர்யா இந்த தொடரில் தனது அரைசதத்தை பதிவு செய்தார்.
விடாமல் பெய்த இந்த ரன் மழை 13 வது ஓவரில் முடிவுக்கு வந்தது. இஷான் கிஷன் 2 பௌண்டரீஸ் மற்றும் 5 சிக்சர்கள் என மொத்தமாக 39 பந்துகளில் 58 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இவரைத்த் தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா தனது பங்குக்கு 2 பௌண்டரீஸ் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் அதிரடி ஆட்டக்காரர் சூரியகுமார் 9 பௌண்டரீஸ் மற்றும் 4 சிக்சர்கள் என மொத்தமாக 42 பந்துகளில் 80 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ரிங்கு சிங் மட்டும் கடைசி வரை நின்று இறுதியை ஒரு 6 உடன் ஆட்டத்தை முடித்தார். ரிங்கு சிங் 4 பௌண்டரீஸ் என மொத்தமாக 14 பந்துகளில் 22 ரன்களை அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆஸ்திரேலியா அணியின் அதிகபட்சமாக தன்வீர் சங்கா 2 விக்கெட்களும், மேட் ஷார்ட், சீன் அபோட் மற்றும் ஜான்சன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது 80 ரன்களை அடித்த கேப்டன் சூரியகுமார் யாதவ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.