சென்னை யானைக்கவுனியில் ஆட்டோவில் ஏறிய 3 பேரின் பேச்சும், செயல்பாடும் ஆட்டோ ஓட்டுநருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், கேட்ட வாடைக்கு மேலே ஆட்டோ ஓட்டுநரிடம் ரூ.3,000 கொடுத்துள்ளனர். கூடவே, பெரிய பெட்டி ஒன்றும் வைத்துள்ளனர்.
இதனால், ஆட்டோ ஓட்டுநர் சுந்தர்ராஜன் யானைக்கவுனி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துவிட்டு, ஆட்டோவை அப்படியே காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த 3 பேரும் ஆட்டேவில் இருந்து தப்பிக்க முயன்றபோது, விரட்டிச் சென்று மடக்கி பிடித்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.2 கோடி ஹவாலா பணத்தைப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலுக்காகக் கொண்டு செல்லப்பட்ட பணமா இது என சந்தேகத்தின்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்