இங்கிலாந்து நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 32 கன்னியாகுமரி மாவட்ட தமிழ் மீனவர்களை மீட்டுக் கொடுத்த, பாரதப் பிரதமர் மோடிக்கும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இங்கிலாந்து நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 32 கன்னியாகுமரி மாவட்ட தமிழ் மீனவர்களை, தமது அயராத முயற்சியால் விடுவித்து மீட்டுக் கொண்டு வந்த, நமது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக சார்பிலும் மற்றும் தமிழக மீனவர்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.