இந்தியாவைச் சேர்ந்த ஆதித்யா அத்லகா என்பவர், அமெரிக்காவின் சின்சினாட்டி மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இவர், கடந்த 9-ஆம் தேதி சின்சினாட்டியில் உள்ள வெஸ்டர்ன் ஹில்ஸ் வையாடக்ட் பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவரது காரின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், கார் கண்ணாடியைத் துளைத்துக்கொண்டு அவர் மீது குண்டு பாய்ந்தது.
இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இரத்தத்தில் வெள்ளத்தில் விழுந்த கிடந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து பல்கலைக்கழகத்தின் முதல்வா் கூறியதாவது: ஆதித்யா அனைவரிடமும் அன்பாக பழகும் மிகச்சிறந்த மாணவா். அவரின் ஆராய்ச்சிகள் வியக்கத்தக்கவையில் இருக்கும். அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆதித்யாவை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்குப் பல்கலைக்கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.