இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் சொத்துக்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தயாரா என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மணல் கொள்ளை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அமலாக்கத்துறை முன் ஆஜராகி எவ்வளவு மண் அள்ள அனுமதிக்கப்பட்டது, எவ்வளவு மண் அள்ளப்பட்டது போன்ற விவரங்களை தெரிவிக்க அதிகாரிகளுக்கு என்ன தயக்கம் என அவர் வினவினார்.
தமிழகத்தில் உள்ள கோவில் சொத்துக்கள் எவ்வளவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது தற்போது தெரிய வருவதாகவும், இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முதலமைச்சர் ஸ்டாலின் தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஆவின் பச்சை நிற பாக்கெட்டுக்கள் நிறுத்தி வியாபார நோக்கில் தமிழக அரசு செயல்படுவதாகவும் அமைச்சர் எல்.முருகன் கூறினார்.