கார்த்திகைத் தீபத் திருநாளில், மாவலி, சூந்து, சொக்கப்பனை என்ற பல்வேறு பெயர்களில், நடைபெறும் ஒரு விளையாட்டு.
தென்மாவட்டங்களில், பனம் பூவைக் கருக்கித் தூளாக்கி பொட்டலமாகக் துணியில் கட்டி வைத்துக் கொள்வார்கள். கொங்கு மண்டலத்தில் தென்னை ஓலையை பயன்படுத்துவார்கள்.
குறிப்பாக, ஓலை மட்டைகளின் நடுவே வைத்துக் கட்டிவிடுவார்கள். இதை நீண்ட கயிற்றில் கட்டிவைத்துக் கொண்டு நெருப்பை வைத்து விடுவார்கள்.
அப்போது, கயிற்றைப் பிடித்து வேகமாகச் சுற்றுவார்கள். அது தீப்பொறிகளை உருவாக்கி சிதறி பல உருவங்களை ஏற்படுத்தும். அப்போது “மாவலியோ மாவலி” என்று சத்தமிடுவார்கள். இது பார்ப்பதற்கு இனிமையாக இருக்கும். இந்த வழக்கம் நீண்ட காலமாக வழக்கத்தில் உள்ளது.