சமூக நீதிக்கு பாதுகாவலன் என்று திமுகவினர் மக்களிடம் பொய் நாடகம் நடத்தி வருகின்றனர் என மத்திய இணைஅமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
சேரியில் பட்டியல் இன மக்கள் மட்டும் வசிக்க வில்லை, அனைத்து சமுதாய மக்களும் வசிக்கின்றனர் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கோயம்பேட்டில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்திப்பில் தெரிவித்தார்.
அப்போது பேசியவர்,
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
இன்று அரசமைப்பு சட்ட நாள். 2015 இல் இருந்து இந்த நாளை நாம் கொண்டாடி வருகிறோம்.
தமிழக பாஜக நிர்வாகிகள் சென்னையில் வாக்காளர்களின் பெயர் திருத்தம் செய்து கொண்டிருந்த வேளையில் திராவிட முன்னேற்ற கழகத்தை சார்ந்தவர்கள் தாக்கியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்று முதலமைச்சர் தான் கை காட்டுபவர் தான் நாட்டின் பிரதமர் என்று பேசியுள்ளார். அப்படி என்றால் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள வில்லையா என்ற கேள்வி எழுகிறது? இந்தியா கூட்டணி நிலைப்பு தன்மையற்றதாக உள்ளது என இது காட்டுகிறது.
நாளை வி.பி சிங் சிலை திறக்க உள்ளதாக கூறினார். அது வரவேற்கத்தக்கது. ஆனால் எப்படி மண்டல கமிஷனின் அறிக்கை ஒ.பி.சி மக்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா அதேபோல் பீகார் அரசு தாமாக முன்வந்து சாதி வாரிய கணக்கெடுப்பு எடுத்துள்ளனர். பீகாரில் எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு போல் தமிழகத்திலும் ஜாதிவாரி கணக கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
மத்திய பிரதேசத்தில் நான்கு முறை பாஜாக ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது , பிரதமர் மோடியின் திட்டங்கள் மக்களின் நலனுக்கு செயல்பட்டு வருகிறது
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அங்கு மக்கள் காங்கிரஸ் ஆட்சியினை தூக்கி எறிய வேண்டும் என விரும்புகின்றனர் மிசோரமில் பாஜக ஆட்சி தான் அடுத்த தேர்தலில் வெற்றி பெறும்.
மத்திய அரசாங்கம் எங்கும் சாதி வாரிய கணக்கெடுப்பு எடுக்க கூடாது என கூறவில்லை. நாங்கள் தான் சமூக நீதிக்கு ஒரு பாதுகாவலன் என்று திமுகவினர் மக்களிடம் பொய் நாடகம் நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூரில் 250 ஆம்புலன்சில் 100 சதவீதம் மத்திய அரசு 40 கோடி ரூபாய் அளித்து, அதை செயல்படுத்துவது தமிழ்நாடு மாநில அரசின் பணி, மாநில அரசு அந்த பணியை செய்யவில்லை, 40 கோடி ரூபாய் கொடுத்து ஒரு வருடம் ஆகிவிட்டது இன்னும் ஒரு வாகனத்தை கூட கண்ணில் காண்பிக்க வில்லை.
கடைக்கோடி மனிதருக்கு இடஒதுக்கீடு மட்டுமில்லாமல் அனைத்து நலத்திட்டங்கள் செல்ல வேண்டும் என பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்.
சேரி என்பது ஊர் என்று தமிழில் ஒரு பொருள் அதை பற்றி விவாதிக்க தேவையில்லை , இதில் காங்கிரசின் மனப்பான்மை நமக்கு வெளிப்படுகிறது.
சேரியில் பட்டியல் இன மக்கள் மட்டும் வசிக்க வில்லை, அனைத்து சமுதாய மக்களும் வசிக்கின்றனர். தேசத்தின் இறையாண்மைக்கு எதிராக ஒளிபரப்பப்படும் அனைத்தும் குற்றம் எனத் தெரிவித்தார்.